அரசியலில் இருந்து ஒதுங்கும் தம்மிக்க பெரேரா
மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவாதாக அறிவித்துள்ளார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.
எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கபட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா , ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த யோசனையை விட்டு அவர் அதிலிருந்து விலக்கிக் கொண்டார்.
இந்நிலையில் அரசியலில் இருந்து அவர் முற்று முழுதாக விலகவுள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை