இது எத்தகைய சமூகப் பொறுப்புணர்வு?
நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள், வடக்கு கிழக்கும் அதே தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது.
ஐந்தாறு ஆசனங்களுக்கு மழைக்கால ஈசலைப்போல புற்றில் இருந்தெல்லாம் முளைத்து வந்து ஆயிரத்தெட்டு பேர் போட்டியிடுகிறார்கள். ஒற்றுமை என்பது எங்களுக்கு எட்டாக்கனி. சில்லுச் சில்லாக சிதறுவதிலும், சிதறடிப்பதிலும் பெயர் போனவர்கள் அல்லவா நாங்கள் !!
போதாக்குறைக்கு சுயலாப அரசியல் வேறு.
நிற்க !!
கீழுள்ள ஒளிப்படத்தில் இருப்பது வன்னிமாவட்ட தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான சுவரொட்டி. ஒட்டப்பட்டிருக்கிற இடத்தை பாருங்கள்.
கபளீகரம் செய்யப்பட்டுள்ள சுவர்களை பாருங்கள். இது எத்தகைய சமூகப் பொறுப்புணர்வு? தமது தொண்டர்களுக்கு ஒழுக்க விதிகளை சொல்லிக் கொடுக்கத் தெரியாத இவரைப் போன்றவர்கள்தான் மக்களுக்காகவும் சமூக நன்மைக்காகவும் தன்னலமற்று செயற்படப்போகிறார்களா?
இவர்களைப் போன்றவர்களுடைய குணம் அறிந்துதான் கிராம மக்கள் கட்டடத்திற்கு அருகில் ஒரு விளம்பரப் பலகையினையும் நட்டு வைத்திருக்கிறார்கள். அதையும் மீறிய இத்தகைய செயற்பாடுகளை நிகழ்த்திய குறித்த சட்டத்தரணியினுடைய தொண்டர்களை என்னவென்று சொல்வது??
வேட்பாளர்களே !!
நீங்கள் யாராகவும் இருங்கள், விவசாயியோ, வைத்தியரோ, சட்டத்தரணியோ, பொறியியலாளரோ, ஆசிரியரோ அல்லது வணிகரோ யாராகவும் இருங்கள்.
ஆனால் உண்மையில் நீங்கள் மக்களுக்காக களத்திற்கு வருகிறீர்கள் என்றால் முதலில் சமூக பொறுப்புணர்வோடு சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை சூழ உள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.
தந்தைக்கு உபதேசம் செய்த தனயனை கொண்டவர்கள் நாங்கள், எவராக இருந்தாலும் சுட்டுங்கள் மக்களே !!
பூசப்பட்டுள்ள வர்ணங்களுக்கும் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களுக்கும் சேதம் விளைவிக்காதவகையில் குறித்த சுவரொட்டிகளை குறித்த வேட்பாளர் (சட்டத்தரணி) அகற்றி ஆவன செய்ய வேண்டும்.
இடம் - மாந்தை மேற்கு பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட கட்டாடுவயல் கிராமத்திலுள்ள பேருந்து நிழற்குடை, மன்னார் மாவட்டம்,
கருத்துகள் இல்லை