2009 பின் கஜேந்திரகுமார் மட்டுமே தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் என நிரூபித்திருக்கிறது!
2009 மே 18ற்கு பின்னரான 15 ஆண்டுகால ஓட்டம் கஜேந்திரகுமார் மட்டுமே தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் #என நிரூபித்திருக்கிறது!
அன்புடன் ஈழத்தமிழ் உறவுகளுக்கு!!!
தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தேசியத்தலைவர் பிரபாகரன் போல் 10 பிரபாகரன்களை உருவாக்கக்கூடிய வலு தமிழ் இனத்திற்கு இருக்கிறது என கூறியிருக்கிறார், நான் அதனை அவ்வாறு இருக்கமுடியாது என்று கூறவில்லை. அது நிகழும்போது நிகழட்டும்.
1972 ம் ஆண்டு விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், 15 ஆண்டுகள் கடந்து, இந்திய இராணுவத்திற்கு எதிராக உறுதியான முடிவை எடுக்கும் போதே மேதகு தமிழர்களின் தேசியத்தலைவர் ஆகின்றார்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர்,
*தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை அல்ல,
*புலிகளையும் விசாரிக்க வேண்டும்,
*சர்வதேச விசாரணை தேவையில்லை,
*உள்ளக விசாரணை மட்டும் போதும்,
*நாங்கள் சமஸ்டியை கைவிட்டு விட்டோம்,
*இந்தியாவின் 13 தான் தீர்வு,
*கற்பழித்த பிரேமானந்தாவின் சீடர்களை விடுதலை செய்யுங்கள்,
*நாங்கள் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை,
*இவர்களுக்கு சாராய பார் திறக்க அனுமதி கொடுங்கள்,
*சரத் பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள்,
*மைத்திரிக்கு வாக்களியுங்கள்,
*சஜித்திற்கு வாக்களியுங்கள்,
*அனுராவிற்கு வாக்களியுங்கள்,
இவ்வாறு பெட்டி, பட்டை, கொட்டை, அரசியல் செய்த கூட்டத்திற்கு மத்தியில்……..!!!!????
*தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும்,
*தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒற்றை ஆட்சி அல்ல, சமஸ்டி அடிப்படையில் மட்டும்தான் அமைய வேண்டும்,
*யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்கின்றன,
*எம் தேசத்தை அங்கீகரித்தால் உங்கள் தேசமும் வளம் பெறும்,
*தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் சிங்கள ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிப்பதே சிறந்தது,
என்ற நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் ஒரே தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டுமே. 2009ற்குப் பிற்பட்ட கடந்த 15 ஆண்டுகாலத்தில், அவர் எடுத்த உறுதியான நிலைப்பாடு, அவரை ஈழத்தமிழர்களின் தலைவராக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இதனை அனைவரும் புரிந்து கொண்டு அவரைப் பலப்படுத்துவோம். சிந்திப்போம், வாக்களிப்போம்.
கருத்துகள் இல்லை