5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்.


 40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்.


பெங்களூரு இந்திரா நகரிலிருந்து விமான நிலையத்திற்கு வர 40 கிலோ மீட்டர் ஆகும். இதனை சாலை போக்குவரத்து வழியாக கடப்பது என்றால் சரியாக 1-1/2 மணி நேரம் ஆகும். இதற்கு டாக்ஸிக்கு கட்டணம் ரூ 2500.


ஆனால் தற்போது ஏர் டாக்ஸியில் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே. இதற்கு கட்டணம் ரூ.1,700 ஆகும்.


பெங்களூர் இந்திரா நகர் பகுதியிலிருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்து வர சரளா ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் BIAL கூட்டு சேர்ந்துள்ளது.


இது இந்தியாவின் முதல் eVTOL நட்பு விமான நிலையமாக மாறும்.

சுத்தமான ஆற்றல், பூஜ்ஜிய உமிழ்வு, குறைந்த சத்தம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.


மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் பறக்கும் ஏர் டாக்ஸில் ஒரே நேரத்தில் 7 பயணிகள் பயணம் செய்யலாம்.


இந்த சேவை விரைவில் புதுவை - சென்னைக்கு இடையில் தொடங்கப்பட உள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.