காலநிலையால் யாழில் ஏற்பட்ட துயரம்!!


 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும்,

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும்,

ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும்,

ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும்,

ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.