எஸ்.ஜெய்சங்கர் பிரதமர்,ரணில், சஜித்தை சந்தித்த !
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் இன்று (04) பிற்பகல் உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதற்கமைய, இன்று (4) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த ஜெய்சங்கர், பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனும் எஸ்.ஜெய்சங்கர் கலந்துடையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை