வாழ்வியல் தத்துவம்!!
• வாழ்க்கையை சற்று தனித்து வாழவும் பழகிக்கொள்ளுங்கள், ஏனெனில் நம்மோடு இருப்பவர் என்று காற்றில் மறைந்து போவார் என்று தெரியாது.
• அனைவரும் நம் முகத்தின் முன் நடந்துகொள்வது போன்று முதுகின் பின் இருப்பதில்லை.
• சர்க்கரை போல இனிக்க பேசினாலும், ஒருநாள் பாகற்காய் போன்று மாறும் ஆற்றல் கொண்டவர்.
• நமக்கான நேரத்தையும் திட்டத்தையும் வருங்காலத்திற்கு நாம் தான் சேமிக்க வேண்டும், நம்மைத் தவிர வேறு யாராலும் நமக்காக அதை சிறப்புறச் செய்ய இயலாது.
• அதிக நட்பு வட்டாரங்கள் சில சமயங்களில் நம்மையே வாட்டி விடும்.( நான் அனுபவித்து பட்டுக்கொண்டது).
• வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்படி ஒரு அங்கமாக உள்ளதோ அதுபோல இன்னல்கள், துயரங்களும் கூட ஒரு அங்கமே. ஏனென்றால் வாழ்க்கையின் வடிவம் வட்டம்.
• நாம் நாமாகவே இருக்க வேண்டும், பிறரை போல அனைத்து வகையிலும் மாறலாம் என நினைத்தால் உலகம் உங்களை மிதித்து அடக்கி விடும்.
• என்னிடம் அனைத்தும் உள்ளது எனப் பெருமை அடித்துக் கொள்வது முட்டாள்தனமே. இன்று உங்களுடையதாக இருப்பது நாளை வேறொருவருக்கு சொந்தமாகலாம்.
• வாழ்க்கையை பிறரை சார்ந்து வாழ்ந்தால், நாம் நாமாகவே இருக்க முடியாது.
எந்த செயலுக்கும் அடிமையாகக் கூடாது..
அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் அன்பாக இருந்தாலும் சரி....
முருகேசன்
கருத்துகள் இல்லை