பயத்தங்காய் பொரியல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்.
பயத்தங்காய் - ஒரு கட்டு (கால் கிலோ)
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை நூற்றைம்பது மில்லி தண்ணீர் விட்டு வேக வைத்து அரை வேக்காடு வந்ததும் காய்களை பொடியாக நறுக்கி கழுவி சேர்த்து உப்புப் போட்டு வேக விடவும்.
காய் வெந்ததும் இறக்கவும். இறக்கும் போது பருப்பு மலர்ந்திருந்தால் போதும்.
சீரகத்தையும், மிளகாயையும் நொறுங்கத்தட்டி கடைசியில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை வைத்து தட்டி எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயக் கலவையை போட்டு வதக்கி வாசனை வந்ததும் காய் கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் பிரட்டி தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.....
krvlog
கருத்துகள் இல்லை