விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில்,நீரியல் வளங்கள் அமைச்சராக சனாதிபதி பொறுப்பேற்பு!📸!

 


விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்றேன்.


பிரதானமாக,


 • கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு விசாலமானது என்பதோடு அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் 

• வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்காக துணைநிற்பதாகவும்

• சம்பிரதாயமான அரசியல் பழிவாங்கல் இனிமேல் இடம்பெறாது எனவும்

• இது வரை ஆண்ட தலைவர்கள், ஊடகங்களுக்கு முன்பாக அரச அதிகாரிகளை கேள்வி எழுப்பியது போன்று எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் அரசு ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் 


கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலும் சுட்டிக்காட்டினேன்.



.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.