கால மாற்றம்!!
நானெல்லோ முதலில பயந்து போனன்...!
என்னடா இது ...! காணாமல் போனவர் பட்டியலோ எண்டு.
அது பாத்தா இந்தமுறை அரசியலில் இருந்து தாமாகவே ஓய்வெடுப்பவர் அல்லது ஒதுங்குகிறவர்களாம் 60 பேர்.
தேடிப் பிடியுங்கோ உங்கள் அபிமானிகளை.
2 பேர் படம் இதில் அகப்படவில்லை. அதில் ஒருவர் மேவின் சில்வா என்கிறார்கள்..
புத்திசாலிகள்.....இனி தேர்தலில் வெல்ல முடியாது. அநுர அரசில் சலுகைகள் இல்லை . அரசியலில் உழைக்கமுடியாது என்பதை சூதானமாய் புரிந்து கொண்டார்கள்......
ஆனா எங்கட பக்கம்தான் கனபேர் கதிரையை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டிருக்கினம். இனி மக்கள்தான் அவையள எழுப்போணும் கண்டியளோ.
இது ஒரு பக்கம் இருக்க.....
ஹம்பாந்தோட்டையில் 88 வருடங்களின் பின்னர் தமது பிரதிநிதித்துவத்தை ராஜபக்ச குடும்பத்தினர் இழந்துள்ளனராம்.
1936 இல் டி.ஏ ராஜபக்ச ஹம்பாந் தோட்டையில் தேர்தல் அரசியலை தொடங்கியிருந்தார். இவர் ராஜபக்ச வின் தந்தை . தஹநாயக்கா அவர்களின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைசராக இருந்தவராம். மாமன் டி.எம் ராஜபக்ச 1930 களில் ஹம்பாந்தோட்டை அரசவை உறுப்பினராக பதவி வகித்தவராம்.
இதுக்குப் பிறகு அவருடைய குடும்பமே அரசாங்கத்தை cover பண்ணியிருக்கினம் எண்டால் பாருங்கோவன்...
* டி. ராஜபக்ஸ
* லக்ஷ்மன் ராஜபக்ச
*ஜோர்ஜ் ராஜபக்ச
*மகிந்த ராஜபக்ச
*சமல் ராஜபக்ச
*பசில் ராஜபக்ச
* நிருபமா ராஜபக்ச
* நாமல் ராஜபக்ச
* யோஷத ராஜபக்ச
*ரோஹித ராஜபக்ச
இவர்கள் எல்லோரும் அவ்வப்போது அரசியலில் தோன்றி படாதபாடு படுத்தியிருக்கினம் எண்டு இலங்கை செய்தி ஒண்டில சொல்லீச்சினம்.
எந் பார்வையில் குடும்ப அரசியல் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த சமூகம் வளராது. ஆட்சியாளருக்கு தலைக்கனம் மட்டுமே உயரும்.
அருந்ததி குணசீலன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை