சீசெல்ஸ் நாட்டின் முக்கிய பதவியில் இலங்கையர்!!

 


சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சீ ஷெல்ஸ் அரச சபையில் நேற்று (16) வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சீ ஷெல்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) , கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

அதோடு ( Vincent Perera)  மேலதிகமாக பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.


மேலும் வின்சென்ட் பெரேரா ( Vincent Perera) , சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.