இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை! க. சுகாஷ்!

 


எந்தக் களத்திலும் விலைபோகாது சலுகைகளுக்கு அடிபணியாது தடம்மாறாது #தமிழ்த் #தேசியத்தின் பாதையில் பயணிப்பேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி, 


அன்புக்குரிய மக்களே!


ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒற்றைத் தலைமையான #கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் (🚲) சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் #யாழ்ப்பாணம் - #கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிடுகின்றேன் என்ற தகவலை உத்தியோகபூர்வமாக அறியத்தருகின்றேன்.



நீங்கள் எனக்கு அங்கீகாரம் தந்தால் தமிழினத்தின் விடுதலைசார் - உரிமைசார் அரசியலுக்கு முதலிடம் வழங்குவதோடு, தமிழ்த் தேசத்தின் தற்சார்புப் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்த்து, மாவீரர் குடும்பங்களுக்கும் அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளுக்கும் முன்னுரிமை வழங்கி, ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசத்திலும் வறுமை என்பது மாணவர்களின் கல்வி - விளையாட்டு - போஷாக்கு ஆகியவற்றுக்குத் தடையாக அமையக்கூடாது என்பதன் அடிப்படையில் அதியுச்ச நேர்மையோடு செயற்படுவேன் என்ற உத்தரவாதத்தை இத்தால் வழங்கி நிற்கின்றேன்.


அன்புரிமையுடன்,

க. சுகாஷ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.