ஈழத்தமிழர்கள் இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் கொண்டுவர முடியும்.!

 


உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்கள் இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் கொண்டுவர முடியும். 



அனைவரும் ஊரிலுள்ள உங்கள் குடும்ப உறவுகள், நண்பர்கள் அனைவரையும் அந்தந்தப் பகுதியிலுள்ள ததேமமு (TNPF) வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கச் சொல்லுங்கள். முடிந்தவரை அழைத்துப் பேசுங்கள். 


முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துச்சொல்லுங்கள். எல்லா மாவட்டங்களிலும் உள்ள நண்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.


கட்சியிலுள்ள சிலரது குளறுபடித்தனங்கள் காரணமாக எனக்கும் கட்சியின் மீது பல முரண்கள் இருக்கிறது. கட்சியின் சில கொள்கைகளில் முரண் இருக்கிறது. ஆனால் அவற்றை என்றோ ஒருநாள் பேசிச் சரிசெய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் தூரநோக்கின் அடிப்படையில் முன்னணிக்கே வாக்களிக்கவேண்டும்.


தமிழ், தமிழர்நிலம், நினைவெழுச்சி, போன்றவற்றை அரசியல் ஆதாயங்கள் என்ற வட்டத்திற்கு அப்பால் நின்று, நாள்தோறும் தமது கடமையாக வரித்துக்கொண்டு செயற்படுத்த முன்னணி இளைஞர்களால் மட்டுமே முடிகிறது. 


அதிலும் குடும்பச்சுமைகளையும் புறக்கணித்துவிட்டு தமிழர் உரிமைக்காக வீதியில் நிற்கும் பலர் முன்னணியில் இருக்கிறார்கள். பலமுறை கைதுசெய்யப்பட்டுமிருக்கிறார்கள். 


சிங்கள ஆளும் தரப்பு போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறதோ இல்லையோ; தமிழர் நிலத்தில் இன்னமும் சிங்களக் கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது என்பதை உலகிற்கு அடையாளப்படுத்துவதில் முன்னணி, முதன்மையாக நிற்கிறது. 

உலகில் இனங்களின் வரலாறு கடத்தப்படுவது இவ்வாறுதான்.


 "ஏன் தமிழர் மீது இந்த அடக்குமுறை...?" என பதின்ம வயது இளையோரைச் சிந்திக்க வைக்கும் செயற்பாடுகளை, கண்ணாடியில் பட்டுத்தெறிக்கும் ஒளியாகப் விம்பப்படுத்துவது முன்னணி மட்டும்தான். 


இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடியும்வரை மட்டும்தான் JVP என்ற கட்சி, 2024 என்ற வருடத்தில் நிற்கும். பின்னர் 1983 க்குப் போய்விடும். 


இருக்கும் நிலத்தையும் இனத்தையும் தக்கவைக்க இனப்பற்றுள்ள கட்சி தேவை. அதுவேதான் முன்னணியின் பாதை..!


கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவோம்.


Vote for #cycle

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.