தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் கட்சி அரசியலுக்கு அப்பால் மிக மிக முக்கியமானது!
தமிழரசு கட்சியின் திரு சுமந்திரன் அணியின் ஆதரவாளர்கள் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள்
ஆனால் திரு சுமந்திரன் பங்கேற்ற நல்லாட்சி காலத்தில் தான் தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டப்பட்டது என்பதை மறந்து விடுகின்றார்கள்
குறித்த பௌத்த கட்டுமானத்தை நல்லாட்சியில் தடுத்திருந்தால் 100 அடி உயரமான தூபி (Stupa) திரு கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது அங்கு கட்டப்பட்டு இருக்காது
அதே போன்று நல்லாட்சி காலத்தில் நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்டபூர்வமாக்க பட்ட போது தடுத்திருக்க வேண்டும்
இது தவிர நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரை அதே நல்லாட்சி காலத்தில் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றதை தடுத்திருக்க வேண்டும்
துரதிருஷ்டவசமாக நல்லாட்சி அரசாங்கத்தில் பங்கேற்ற திரு சுமந்திரன் உட்பட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் தடுக்க தவறி விட்டார்கள்
ஆனால் இப்போது யாழ்ப்பாணம் எங்கும் மிக பரவலாக தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது
குறிப்பாக வல்லிபுரம், ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில்,நிலாவரை, சுன்னாகம், மல்லாகம், பருத்தித்துறை பொன்னாலை வீதி என மிக பல இடங்களில் பௌத்த அடையாளங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்
தொல்லியல் திணைக்களத்தின்ஆலோசகர் எல்லாவெல மேதானந்த தேரர் நல்லூர் கோயில் கூட சபுமல் குமார அவர்களால் கட்டப்பட்டது என உரிமை கோருகின்றார்
கந்தரோடையில் மட்டும் 50 பௌத்த தூபிகள் இருந்தன என்றும் அவை சிங்கள மக்கள் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்தமைக்கான ஆதாரம் என்றும் பதிவு செய்து இருக்கின்றார்
ஆனால் தையிட்டியை சூழ தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று அந்த சூழல் சர்ச்சையாக இருப்பதால் உரிமை கோரும் யாழ்ப்பாணத்தின் மற்ற இடங்களை நோக்கி நகர்வதற்கு தொல்லியல் திணைக்களம் இப்போது தாமதிக்கின்றது
திருகோணமலையில் ஒரே பிரதேசபை எல்லைக்குள் 32 விகாரைகளை மிக சில சில வருடங்களில் நிர்மாணிக்கும் தொல்லியல் திணைக்களம் வடக்கில் நிலவும் எதிர்ப்பினால் மட்டுமே தயங்குகின்றது.
ஆகவே தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் கட்சி அரசியலுக்கு அப்பால் மிக மிக முக்கியமானது என்பதை திரு சுமந்திரன் அணி புரிந்து கொள்ள வேண்டும்
இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் மட்டும் குறைந்தது 68 இடங்களில் நிரந்திர இராணுவ முகாம் உள்ளது.
கருத்துகள் இல்லை