ரயில் மோதி யுவதி மரணம்!!

 


அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரத்தனர்.

விபத்து ஏற்படும் முன்பு குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.