சுக்கு காப்பி செய்வது எப்படி!
தேவையான பொருள்கள்:
1. மிளகு
2. சதகுப்பை
3. சித்தரத்தை
4. திப்பிலி
5. தனியா
6. சுக்கு
7. பனை வெல்லம்
செய்முறை:
1. சுக்கு, தனியா, மிளகு, திப்பிலி, சித்தரத்தை (சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பிறகு வறுக்கவும்), சதகுப்பை ஆகிய அனைத்துப் பொருள்களையும் ஒரு வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்சியில் நைசாகப் பொடிக்கவும்.
2. மேற் பொடித்த இந்தப் பொடியை காற்று புகாத, ஈரம் இல்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
3. உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. நன்கு கொதித்த மாத்திரத்தில் இறக்கி வடிகட்டினால் இதோ சுவையான சுக்கு காப்பி தயார்.....
கருத்துகள் இல்லை