வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற அன்னை மகாலட்சுமியுடன் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம். அன்னை மகாலட்சுமியுடன் குபேர கடவுளையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில் செல்வத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.
கிரக நிலை மாற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டாலும் சில தெய்வங்களின் அனுகிரகத்தினால், சில ராசிகள் பாதிப்பு ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பை அனுபவிப்பார்கள்.
ரிஷப ராசி
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். ஆடம்பரம் மற்றும் மகத்துவத்திற்கு காரணமான கிரகம். குபேர் தேவ் மற்றும் அன்னை லட்சுமி ஆகியோர் செல்வம் மற்றும் செழிப்புக்கு எஜமானர்கள். எனவே, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆசீர்வாதங்கள் இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கு ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படாது.
கடக ராசி
கடக ராசியின் அதிபதி சந்திரன், இந்த ராசியும் குபேரனுக்கு மிகவும் பிடித்தமான ராசியாகும். கடக ராசிக்காரர்கள் குபரரின் அருளால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்கும் சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் குபேர பகவான் இவர்களிடம் அளவில்லாத கருணை காட்டுவார். இதனால் இவர்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் பணக்காரர்களாகி விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள்.
தனுசு ராசி
தனுசு ராசியின் அதிபதி குரு. மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் அறிவு ஆகியவற்றின் காரணியாக உள்ள குருவின் ஆசியுடன், குபேரனின் ஆசியும் உண்டு. இந்த ராசிகள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் உண்மையுள்ளவர்கள். முதலீட்டு விஷயங்களிலும் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். இவர்களும் தங்கள் வாழ்வில் ஏராளமான செல்வத்தைப் பெறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை