நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி!
மன்னார் - மடு பிரமனாலங்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (24-10-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டி பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது சந்தியில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம் - பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை