செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி .!


தேவையான பொருள்கள்


மஷ்ரும் 200 கிராம்

வெங்காயம் 1

சீரகம் 1/2 ஸ்பூன்

எண்ணெய் 50 மில்லி

அரைப்பதற்கு

தேங்காய் துருவல் 3 ஸ்பூன்

காய்ந்தமிளகாய் 10 அல்லது 15

தனியா 2 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

மிளகு 1 ஸ்பூன்

கசகசா 1 ஸ்பூன்

ஏலக்காய் 2

அன்னாசிப்பூ 2

பட்டை 2

கிராம்பு 2

வதக்கி அரைக்க

சின்னவெங்காயம் 1 கப்

தக்காளி 3

இஞ்சி 1 துண்டு

பூண்டு 1

செய்முறை

முதலில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்


வறுத்தல்: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்


தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.


அரைத்தல் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தாளித்து வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்


வெங்காயம் வதக்கவும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.


உப்பு சேர்க்கவும். அரைத்த மசாலா நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.


நறுக்கிய காளான் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி செட்டிநாடு மஷ்ரும் கிரேவி தயார்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.