ஆண்கள் திருமணமாகி மனைவியின் தாய்வீடு சென்றால் என்ன!!

 


பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்வதைத் தவிர்த்து ஆண்கள் திருமணமாகி மனைவியின் தாய்வீடு சென்றால் என்ன?

இலங்கையில் பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்வதில்லை .. அதே வீட்டில்பெற்றோர்களுடன் இருப்பார்கள் ..அல்லது பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வேறு வீடு கட்டிக் கொடுப்பார்கள்… அல்லது மணமக்கள் விரும்பிய இடத்தில் வாழ்வார்கள்.. தனிக்குடித்தனம் போதல் .. கணவனின் அம்மாவுடன் சண்டையிடுதல் நாத்தனார் கொழுந்தனார் பிரச்சனைகள் என்று எதுவும் இருப்பதில்லை.. ! ஆண்களை வீட்டில் இருக்கும் வரை பெற்றோர்களே கவனித்துக்கொள்வார்கள்.. முக்கியமாக பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரித்துப் பார்ப்பதும் இல்லை .பெற்றோர்கள் பிள்ளைகளை காசுக்காக வளர்ப்பதும் இல்லை.. வரும் மருகள் அந்நிய பெண் என்று நினைப்பதில்லை..

முக்கியமானது ஒரு திருமணம் நடந்துவிட்டால் அந்த கணவன் மனைவிக்கிடையில் ஆலோசனை சொல்ல எவருமே முனைவதில்லை .. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ வழிவிட்டு செல்வார்கள்..! மிகவும் சாதாரணமாக எந்தவித இறுக்க நிலைகளும் அற்று வாழும் பழக்கம் இலங்கைத் தமிழர்களுடம் உண்டு.. எந்தக் குழந்தையும் தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டதாகச் சரித்திரத்தில் நான் அறியவில்லை.உழைப்பு வேறு , அறிவு வேறு, உணர்வு வேறு என்பதை புரிந்த உறவு முறைகளில் வாழ்பவர்கள்.!

தாய் மாமன்தான் சீர் செய்யவேண்டும் என்ற ஓர் அவசியம் இல்லவே இல்லை.. எல்லோரும் எல்லோருக்கும் எல்லாம் செய்வார்கள்.. உறவுகள் எல்லாம் சமநிலையோடே பேணப்படும்..பேரப்பிள்ளைகள் எல்லோரும் ஒன்றுதான் .. இதில் மகன் வழி உறவு மகள் வழி உறவு என்ற பேதம் இருப்பதில்லை என்றாலும் .. குழந்தைகள் தாய் வழி உறவோடே அதிக நெருக்கம் உடையவர்கள்.. பெற்றோர்கள் ஆண்பிள்ளைகள் தனித்துவாழ்ந்தால் கூட பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.. பெண்பிள்ளைகளை அவர்கள் வாழுங்காலங்களில் பிரிவதில்லை.. !

எனக்குத் தெரிந்ததை நான் எழுதினேன் ..எனக்குப் பிறகு வந்த காலத்து மக்கள் எப்படி என்பது தெரியாது .. ஒரு வேளை என் உலகம் சிறியதாக இருக்கலாம்.. இப்போது மக்கள் மாறிக்கூட இருக்கலாம்..!


பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.