வடமாகாண ஆளுநர் செயலகத்தின் அறிவிப்பு!!


 இன்று செவ்வாய்க்கிழமை (01) முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் "அபயம்" எனும் பிரிவினருக்கு மக்கள் தங்கள் குறைகளை கூறி, அவர்களே அதனை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நடைமுறை இருந்தது.

தற்போது புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள நா.வேதநாயகன், அபயம் பிரிவினை நிறுத்தி மக்கள் நேரடியாக தன்னிடம் முறையிட கூடியவாறான பொறிமுறையை உருவாக்கியுள்ளார்.

அதனால் ஊழல் மோசடிகள் துஷ்பிரயோகங்கள், நிர்வாக ரீதியான பிரச்சனைகள் என்பவற்றை ஆளுநரிடம் நேரடியாக முறையிட முடியும் என குறிப்பிடப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.