அக்கா
அக்கா
காத்திருக்கிறாள்
அவள்
நேசித்தவருக்காக....
ஊர்த் திருவிழாவில்
ஓரிரு முறை பார்த்து
காதலாகிக் போனாள்
அவர் மீது.
வவுனியா சென்று
வாகனச்சாமான்கள்
கொண்டு வருவதுதான்
அவருடைய தொழில்.
அப்படித்தான்
அக்கா
நினைத்துக் கொண்டிருக்கிறாள்
இன்றுவரை.
இவள்
ஓயாமல் பார்த்ததில்
ஓரிரு முறை
புன்னகைத்தாராம்.
ஒரு முறை
தொழிலுக்காக
வவுனியா போனவர்
வரவே இல்லை.
அவர்
கந்தகம் சுமந்த
மறைமுக வீரன் என்பது
தெரியவே தெரியாது
அக்காவுக்கு.
வவுனியா போனவர்
வந்துவிடுவார் என்று
வருகிற வரனையெல்லாம்
வேண்டாம் என்கிறாள்
அக்கா..
கோபிகை
கருத்துகள் இல்லை