கட்சிஅலுவலகத்திற்கு வந்த மைத்திரிபால!!

 


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தனது அறிவிப்பை வெளியிடாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று திடீரென தாயக மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு வருகைத்தந்துள்ளார்.


அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனுக்கு பூரண ஆதரவை வழங்குவதற்காகவே தாயக மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.


மேலும், தந்தை செல்லும் வழியில் மகனும் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.