உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள், உங்களிடம் திரும்பி வந்தால் இதை செய்து விடுங்கள்.!


கூனிக் குறுகட்டும் உங்களை ஒதுக்கியவர்கள். 


👉தனிமை எதை புரிய வைக்கிறதோ இல்லையோ. இவ்வளவு நாள் எவ்வளவு பெரிய முட்டாளாய் நாம் இருந்திருக்கிறோம் என்பதை புரிய வைக்கும். 


👉நம்மை தேவைக்கு பயன்படுத்துபவர்களைத்தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக்கொண்டு இருக்கின்றோம். 


👉வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும். யாரையும் நம்பித்தான் இருக்கக் கூடாது. 


👉உங்களை வேண்டாம் என்று விலகியவர் திரும்பி வரும்போது, திரும்பிக்கூட பார்க்காமல் செல்லும் அளவிற்கு மன தைரியமும், திமிரும் இருக்கவேண்டும் உங்களுக்கு. 


👉உரிமை உண்டு என எண்ணினாலும் நமக்கு மரியாதை இல்லை என தெரியும்போது, ஒதுங்கி இருப்பதுதானே நல்லது. ஒதுங்கியே இருங்கள். வாழ்வில் சிறந்த மாற்றம் வரும். 


👉ஆயிரம் பேரைக்கூட எதிர்த்து நில்லுங்கள் பரவாயில்லை. ஆனால் எப்போதும் ஒருவரைகூட எதிர்பார்த்து நிற்காதீர்கள். நினைக்காத பொழுதுகளில் ஏமாற்றம் தந்து விடுவார்கள். 


👉யாரிடமும் உங்கள் வலியை பகிர்ந்து கொள்ள நினைக்காதீர்கள். நம்மிடம் சொல்லிவிட்டு அடுத்தவர்களிடம் நம்மைப் பற்றி சிரித்து மகிழும் உறவுகள் வாழும் உலகம் இது. 


👉யார் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காதீர்கள். நம்பிக்கை உடையும் போது உள்ளமும் உடைந்துதான் போகும். 


👉உங்களை விட்டுச் சென்றவர் திரும்பி வரலாம். ஆனால் திருந்தித்தான் வருகிறார் என்று ஒரு போதும் நம்பி விடாதே. மீண்டும் ஒரு ஏமாற்றத்தை உன் மனம் தாங்காது.


அனைவருக்கும் பகிருங்கள். உணவே மருந்து பக்கத்தை செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.