பொதுமக்களுக்கான அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் விடுக்கும் அறிவித்தல்!

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை


குறைத்துக் கொள்வதற்கும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கத்தக்கவாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அந்த அடிப்படையில் தங்களது பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்த நிலமைகளை அல்லது எடுக்க வேண்டிய பாதுகாப்பு சம்மந்தமான தகவல்களை உங்களுடைய கிராம பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடம் அல்லது கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள்


தொலைபேசி இலக்கங்கள் 


பிரதேச செயலாளர்:- PTM. இர்பான் 774930197


அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் 

UL. அனிசுர் றகுமான்:- 076 0104074


இவ்வண்ணம்

பிரதேச செயலாளர்

அட்டாளைச்சேனை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.