மதத் தலைவர்களிடம் ஆசிபெற்றார் சிறீதரன் எம்.பி.!!📸

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் அவர்கள், நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.


நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அதிவண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அதிவண.பத்மதயாளன் அடிகளார் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தினதும் சிவபூமி அறக்கட்டளையினதும் தலைவர் கலாநிதி.ஆறுதிருமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர்களிடம் ஆசி பெற்றதோடு, அடுத்தகட்ட அரசியல் செயல்நோக்குகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.