தயிர் சாதம் செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள் :-
சாதம் – 1 கப்
தயிர் – 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் – 2 கப்
மாதுளை – தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை :
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
கடலை பருப்பு – ¼ டீஸ்பூன்
உளுந்த பருப்பு – ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
முந்திரி பருப்பு – 5-6 (விருப்பப்பட்டால்)
பெருங்காயத்தூள் – 1 பின்ச்
இஞ்சி
செய்முறை :-
• சாதத்தை 2 (அ) 3 விசில் விட்டு மசிய வேக வைத்து எடுத்து சூட்டுடன் நன்றாக மசித்து விடவும்.
• சாதத்தில் தண்ணீர் இருக்கக கூடாது.
• சாதம் ஆறியதும் ஒரு கப் வெதுவெதுப்பான பாலை கலக்கவும்.
• தயிரை சேர்த்து நன்றாக பிரட்டி, மசித்து சமமாக வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
• ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும், காய்ந்த உடன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், இஞ்சி தட்டி போடவும்.
• விருப்பப்பட்டால் முந்திரி பருப்பு (4 -5) சேர்க்கவும்.
• பெருங்காயத்தூள், காய்ந்த வத்தல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
• தாளிக்கும் போது எண்ணெய் சூடானால் அடுப்பை அணைத்து விடவும்.
• தாளிப்பை சாதத்தில் சேர்த்து கிளறவும்.
• மாதுளை பழம் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
• இன்னும் ஒரு கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
கருத்துகள் இல்லை