மாவீரர்வாரம்.!!

 


மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர் -இன

மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்

கண்ணுக்குள்ளே வந்து கன வாகி நிற்பவர்- வெல்லும்

காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்


பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு

பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு - காவியத்து

நாயகர்கள் கல்லறைகள் மீது


மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்

கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்

செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்..


#மாவீரர்வாரம் 🔥

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.