டெஸ்ட் தொடர் தோல்வி!

 


சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்வி - ஆட்டம் காணும் ரோஹித் குழு.

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விடயமல்ல என இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். 

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 3 - 0 எனும் அடிப்படையில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் இந்த தோல்வியை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அணியை சரியான முறையில் வழிநடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நியூஸிலாந்து (New Zealand) அணியிடம் இந்திய (India) அணி, சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு தோல்வியை சந்தித்த நிலையில், 2025 செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு செல்வதிலும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த காலங்களில் இந்திய அணி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

எனினும் நியூஸிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த பின்னர், அந்த பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த தோல்வியின் பின்னர் உலக டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 58.33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தற்போதைக்கு அவுஸ்திரேலியா 62.50 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கை 55.56 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தநிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட போர்டர்-கவாஸ்கர் கிண்ணப் போட்டிகளுக்காக இந்தியா இந்த மாதத்தில் அவுஸ்திரேலியா செல்கிறது.

இதன்போது, ஏனைய அணிகளின் முடிவுகளை நம்பாமல் உலக டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இடம்பெற ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) அணியினர், நடைபெறவுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தது நான்கிலாவது வெற்றி பெற வேண்டும்

இல்லையேல், இலங்கை - அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் பங்கேற்கும் போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

இது இந்தியா மூன்றாவது தடவையாக நேரடியாக உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியை அடைவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.