ஈழத்து சௌந்தர்ராஜன் மரணம்!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட “ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார்.
1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். வைரவிப்பிள்ளை விஜயரட்ணம், கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில் பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார்.
மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன் “ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற பட்டத்தை வழங்கினார்.
அதனால் அன்று முதல் இவர் ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தார்.
இந்நிலையில் அவரது இழப்பு ஈழத்து கலைஞர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை