உங்களை மறவோம்.!!


ஒவ்வொரு மாவீரனின் இறப்பிலும் தாய் மண்ணின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது!


அவர்கள் வெறும் வீர விதைகளின் விதைப்புகள் அல்ல!

 கோரத்தின் கொடுமை கண்டு கொதித்தெழுந்த தீர்க்கதரிசிகள்!

 

யாருக்கும் அடிபணியா சூரர் பரம்பரைகள்!


நெஞ்சில் குண்டேந்தும் வரை

நேருக்கு நேர் நின்று இனத்தின் கொள்கைக்காய் வினைத் திறனாய் நின்றவர்கள்!

 

அண்டமே வியந்து பார்த்த அஞ்சாத் தலைவரின்

 அகமும் புறமுமாய் நிலத்தின் நீதிக்காய் எழுந்தவர்கள்!


ஆனால்?

 

நாங்களோ அவர்களின் ஆழம் தெரியாது விழ விழ வெற்றிக்காய் மட்டும் கைதட்டியவர்கள்!

 

அதனால் தான் அவர்கள் அகன்ற அடுத்த கணமே

 அவர்களின் கனவை சுமக்காது கால் தடத்தை மாற்றி விட முனைகின்றோம்!

 

உண்மையில் ஒவ்வொரு மாவீரரின் ஈகத்தையும் தாகத்தையும் சரியாய் புரிந்து கொண்டவன் விரையமாய் போக மாட்டான் விடுதலையின் விருப்போடு ஒன்றித்திருப்பான்!

 

அவர்கள் நடந்து வந்த பாதையில் நடக்க முடியாத நொண்டிகளாய் தடம் புரளாது இருந்திருப்பான்! 


ஆனாலும் இன்னும் அவர்களை ஆழமாய் நேசிக்கின்றவர் சோரம் போகாது நிற்கிறார்! 


விடுதலை வெல்லும் வரை விரைவோம் என்கிறார் இதுதான் இனத்தின் விடுதலைக்கான பணி!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.