பிள்ளையார் வழிபாடு!
மன நிம்மதி, மகிழ்ச்சி வேண்டுமா! இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்!
பிள்ளையார் வழிபாடு! கடன் தொல்லை, மனக் கவலை, சனி தோஷம் முதலான கிரகப் பீடைகள் ஆகிய அனைத்தையும் போக்கவல்லவர் பிள்ளையார். கல்வி வளமும், வியாபார அபிவிருத்தியும் அடைய ஆனை முகனைக் கைதொழ வேண்டும்.
கடன் தொல்லை, மனக் கவலை, சனி தோஷம் முதலான கிரகப் பீடைகள் ஆகிய அனைத்தையும் போக்கவல்லவர் பிள்ளையார். கல்வி வளமும், வியாபார அபிவிருத்தியும் அடைய ஆனை முகனைக் கைதொழ வேண்டும்.
1. தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில பகுதிகளில், பிரசித்தமான பிள்ளையார் வழிபாடு ஒன்று உண்டு. ஒரு சதுர்த்தி தினத்தில், சிறு பிள்ளையார் விக்கிரகத்துக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சந்தன- குங்கும திலகம் இட்டு அலங்கரித்து, அவல், பொரிகடலையோ அல்லது மோதகமோ சக்திக்கேற்ப நைவேத் தியம் படைத்து வழிபடுவார்கள்.
பிறகு எது குறித்துப் பிரார்த்தனை செய் கிறார்களோ, அந்த வேண்டுதலை நினைத்து சங்கல்பித்துக் கொண்டு, பிள்ளையாரை ஒரு சர்க்கரை டப்பாவில் போட்டு மூடி வைத்து விடுவார்கள். அடுத்த சதுர்த்தியன்று மீண்டும் அவரை வெளியே எடுத்து பூஜிப்பார்கள். இதேவிதமாக பூஜை தொடரும். பெரும்பாலும், மூன்று சதுர்த்தி களுக்குள் வேண்டிய வரம் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
2. நம்முடைய வினைப்பயனே நமக்குக் கிடைக்க வேண்டிய நல்லனவற்றைத் தடுக்கும். வினையை வேர் அறுப்பதில் நம்முடைய வேலனுக்கு நிகர் வேறு தெய்வம் இல்லை. `சுப்ரமண்ய மூலமந்திர ஸ்தவம்' என்றொரு திவ்விய ஸ்தோத்திரம் உண்டு. இதைப் படித்து முருகனை வழிபடுவதால் தரித்திரம் விலகும், அஷ்ட ஐஸ்வரியங்களும் ஸித்திக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும், சத்ரு பயமும் பிணிகளும் விலகியோடும் என்பார்கள். அந்த ஸ்தோத்திரத்தில் ஒரு பாடல்...
சராரண்யோத்பவம் ஸ்கந்தம்
சரணாகத பாலகம்
சரணம் த்வாம் ப்ரபன்னஸ்ய
தேஹி மே விபுலாம் ச்ரியம்
கருத்து: சரவணப்பொய்கையில் உருவானவரும், ஸ்கந்தனும், தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பவருமான தங்களைச் சரணடைந்தோம். எனக்கு குறைவற்ற ஐஸ்வரியத்தை அளிப்பீராக.
இயன்றபோதெல்லாம் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி முருகனை வழிபடுங்கள்; அவரருளால் வாழ்க்கை வளமாகும். இந்த வழிபாடுகள் தவிர, மங்கலங்களை அருளும் மேலும் சில நியதிகள் உண்டு. அவற்றைக் கடைப்பிடிப்ப தால் வீட்டில் லட்சுமிகடாட்சம் நிறைந் திருக்கும். நம் மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். அவை:
3) வீட்டில் கோலமிடுவது சிறப்பு. அபார்ட் மென்ட் எனில் சமையல் மேடை, பூஜை அறையிலாவது கோலமிடவேண்டும். அரிசி மாவினால் கோலம் போடுவதே உத்தமம்.
4) வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம், பூக்கள், பழங்கள், தாம்பூலம் கொடுப்பது விசேஷம். இதனால், வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். தாம்பூலம் கொடுக்கும் போது தட்சணையாக ஒரு ரூபாயாவது வைத்துக் கொடுக்கவேண்டும். தாம்பூலம் பெறும் சுமங்கலிகளை லட்சுமியாகவே பாவிக்கவேண்டும்.
5) சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பசுக்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, ஒரு சில நிமிடங்களாவது அவற்றின் மகிமை குறித்து தியானித்து வணங்க வேண்டும்.
6) வீட்டைச் சுற்றிலும் விருட்சங்கள் இருப்பது சர்வ மங்கலங்களையும் அளிக்கும். நோய்களும் அணுகாது. மரம் வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டு வாயிலில் துளசிச் செடி வளர்த்து வணங்கலாம். சிறு தொட்டிகளில் வளரும் சிறு தாவரங்களை வளர்க்கலாம். இதனால், பிராண சக்தி அதிகரிக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
7) வீட்டு வாசலில் கருட கிழங்கு (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) கட்டித் தொங்க விட்டால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. அதேபோல், மாவிலைத் தோரணங்கள், துளசிச் செடி ஆகியனவும் தீய சக்திகள் நம் வீட்டுக்குள் வருவதைத் தடுக்கும் வல்லமை பெற்றவை.
8) அன்னபூரணியை அரிசியில் வைப்போம் இல்லையா, அந்த அரிசியை மாற்றும்போது, மொத்தமாக அரிசி வைக்கும் பாத்திரத்தில் மாற்றிவிடுவது நல்லது. பெரும்பாலும் வளர்பிறை, குளிகை காலங்களில் செய்வது நல்லது.
9) திருமாங்கல்யத்தை மிகவும் நைந்து பழசாகும் வரை வைத்திருக்காமல், ஓரளவு நன்றாக இருக்கும்போதே மாற்றிவிடுவது நல்லது. அசந்தர்ப்பமாக மாற்ற வேண்டிய நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த யோசனை. பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி விளக்கேற்றி வைத்து, திருமாங்கல்யம் மாற்றலாம். காலையில் செய்வதே சிறப்பு!
10. எங்கு பெண்கள் கௌரவமாக நடத்தப் படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ் கின்றன. அவ்வாறு இல்லாத இடங்களில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாமல் போகும். மனைவியை கிரஹலட்சுமியாகவும், தாயை பராசக்தியாகவும், சகோதரிகளை, பார்வதிதேவியாகவும், 13 வயதிற்கு மேல் கன்யா லட்சுமியாகவும், 12 வயதுக்குள் சுவாசினியாகவும் பாவித்து போஷித்தால், அந்த வீட்டில் லட்சுமி நித்யவாசம் செய்வாள். அதேபோல், வீட்டுப் பெண்களை வார்த்தைகளால் துன்பப் படுத்தாமல் இருந்தாலே போதும்; தெய்வ அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை