தியாகத்தின் உருவங்கள்!!

 


விதைக்கப்பட்ட இவர்கள்

எங்களின் உறவுகள்.

சிதைக்கப்பட்ட சிறகுகள்

சிறுத்தையின் மகவுகள். 


சொத்து பத்துச் சேர்த்து

சுகபோகமாய் வாழாதவர்கள்.

சொந்தபந்தம் பார்த்து

சுயநலமாய் இராதவர்கள். 


பெற்றவரைப் பிரிந்து

கொற்றவராய் நின்றவர்கள்.

ஒற்றுமையாய் சேரந்து

ஒரே தட்டில் உண்டவர்கள். 


தியாகத்தின் உருவங்கள்.

வீர வரலாற்றின் உயரங்கள்.

மறவாது நாம் வியக்கும்

மாவீரச் சிகரங்கள். 


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.