மாவீரர் நாள் - 4 போர்க்கால சிந்தனை வீரசாகசம்


"கலிபரை வான்கெலி மேற்போக்கி வரும்சன்னம், விலக்கி உதிர்க்கும் சிரிப்பு.


கலிபர் எனப்படும் நவீன சுடுகலன் ஒன்றினால், வானத்தில் வரும் உலங்குவானூர்தியைத் தாக்க வீரன் ஒருவன் குறிவைக்கிறான். அப்போது உலங்குவானூர்தியிலிருந்து வரும் சன்னம்  ஒன்று தன்னைத் தாக்கவருவதைக் கண்டு, போர்ச்சாகசத்தினால் அதனை விலக்கி உலங்குவானூர்தியைப் பார்த்துச் சிரிக்கிறான். 


இக்காட்சிகளைப் போர்க்களத்திலே கண்டு, வீரர்களின் "போரென்ன வீங்கு பொருப்பன்ன திண்தோள்களை" பார்த்துப் பூரிப்பார்கள். 


இவ்வீரர்களுக்கு   அஞ்சி உலங்குவானூர்திகளும், குண்டுவீச்சு விமானங்களும் கீழேவராது. 3000 அடி உயரத்திலே வட்டமிடும்.


"கைவேல் களிற்றுடன் போக்கி வருபவன்

மெய்வேல் களியா நகும்" (திருக்குறள்)


கையில் உள்ள வேலை யானைமீது எறிந்துவிட்டு வேறு வேலைத் தேடி வருபவன், தன்னுடம்பில் தைத்துள்ள வேலைப் பறித்து மகிழ்வான் என்பது திருக்குறள் கருத்து.


இதனோடு நோக்கும்போது   யுத்த சன்னத்தனாக நிற்கும் நம்வீரனின் வீரம் புடம்போடப்பட்டதன்றோ ?


#மாவீரர்வாரம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.