இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 103 ஓட்டங்கள்!

 


கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (29) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சில் 516 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.


அதன்படி, போட்டியில் வெற்றிப் பெறுவதற்கு இலங்கை அணிக்கும் இன்னும் 413 ஓட்டங்கள் ​தேவைப்படுகிறது.


இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.


அதேபோல், பெத்தும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.


பந்து வீச்சில் Kagiso Rabada மற்றும் Marco Jansen ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.


போட்டியின் மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாரிக்கா அணி 5 விக்கெட்டுக்களுக்கு 366 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.


தென்னாபிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 122 ஓட்டங்களையும், அணித்தலைவர் Temba Bavama 113 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.


பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


அசித பெர்ணான்டோ ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 191 ஓட்டங்களையும் இலங்கை அணி 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.