கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து விபத்து!!
தொழினுட்ப கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கடை மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (05) பிற்பகல் இரத்தினபுரி, பம்பஹின்ன பிரதேசத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை