பேர்லின் மண்ணில் நடைபெற்ற தமிழீழ தேசியத் தலைவரின் 70 ஆவது அகவை விழா!📸

 26/11/24 இன்று யேர்மன் தலைநகரத்தில் பேர்லின் நகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70 ஆவது அகவை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு மாலை 18:30மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அதனைத்தொடர்ந்து பேச்சு,கவிதை பாட்டு என நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. இவை தாயகச் சிந்தனைகளுடன் தலைவரின் சிறப்புப்பண்புகளை உள்ளடக்கியதாக இருந்ததைக் காணமுடிந்தது. மேலும் பேர்லின் மண்ணில் பிறந்து வளரும் சிறுவர்களின் மொழிவளத்தையும்,அதனூடாக அவர்களின் தேசப்பற்றையும் பார்க்க முடிந்தது. 


இந்நிகழ்வுகளுடன் சிறப்பாக பிறந்த நாளுக்கான கேக் சிறுவர்கள் சூழ்ந்திருக்க வெட்டி கொண்டாடப்பட்டது. 


இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் இந் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.