அர்ச்சுனாவை எதிர்த்த சாவகச்சேரி இளைஞர்கள்!!

 


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தற்போது மும்முரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் நேற்றையதினம்(08) ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அவர்களுக்கு, அங்குள்ள இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே அருச்சுனாவுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது முன்னின்று உதவியவர்களைப் புறந்தள்ளி வைத்தியர் அர்ச்சுனா புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் குறித்த இளைஞர்கள் கண்டித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.