மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!


இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்திய போதிலும், கடந்த ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி, நவம்பர் 4 முதல் 9 வரை சிறப்பு தடுப்பூசி வாரமாக அறிவிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 20-30 வயதுக்குட்பட்டவர்களில் பதிவாகியுள்ளன. 

இந்த நோய் குழந்தைகளுக்கு, குறிப்பாக 9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியும், 9 மாதங்கள் முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியும் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.