சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஆபத்தான நிலைமையில் பல வகுப்புக்கள்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பிரபல பாடசாலையான கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (08) இரவு பெய்த கடும் மழையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிபர் ஆனந்த உபதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அந்தப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் உள்ள அனைத்து வகுப்புகளும், ஏனைய பல வகுப்புகளும் ஆபத்தான நிலைமையில் உள்ளன. அதேவேளை இன்று (09) இரவு கடும் மழை பெய்தால் மேலும் பல வகுப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள அபாயம் குறித்து மத்திய மாகாண ஆளுநர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை