இடர் காலத்தில் உதவிய நோர்வே உறவுகள்!!
நோர்வேயில் வசித்துவரும் கோகிலா லோகதாஸ் தம்பதிகள் தமது பிள்ளைகளான அபிநயன்,நிவேதிதா இருவரினதும் பிறந்த தினத்தினை முன்னிட்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள இனம் காணப்பட்டுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
தமது பிள்ளைகளின் மகிழ்வான தருணத்தில் மழைஇடரால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி புரிந்து மனநிறைவைக் காணும் நல்லுள்ளம்கொண்ட கோகிலா குடும்பத்து உறவுகள் யாவர்க்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு
பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை