யார் இந்த கிளியோபாட்ரா..?




கிளியோபாட்ரா என்றவுடன் அவர் ஒரு பேரழகி; கழுதைப் பாலில் குளித்து தன் அழகை மேம்படுத்திக் கொண்டவர், என்பன போன்ற கதைகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது…


கிளியோபாட்ரா தொடர்பான ஹாலிவுட் திரைப்படங்களும் அவரை ஒரு “செக்ஸ் சிம்பலாகத்தான்” நமக்கு அறிமுகப் படுத்துகின்றன..


ஆனால் உண்மையில் கிளியோபாட்ரா ஒரு பன்முகத்தன்மையும் நுண்ணறிவாற்றலும் மேதமையும் கொண்ட பன்மொழி வித்தகர்; ஆய்வாளர்; மருத்துவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா…?


1. கிளியோபாட்ரா தனது 17வது வயதில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.


2. அவரால் 9 மொழிகளில் எழுத, படிக்க, பேச முடியும்.


3. அவருக்கு பண்டைய எகிப்திய மொழி தெரியும்


4. அவரது காலத்தில், எகிப்திய மொழி சித்திர எழுத்துக்களை படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் கிளியோபாட்ராவும் ஒருவர்.


5. கிரேக்க மொழி தெரியும் அவருக்கு


6. பார்த்தியன், ஹிப்ரூ, மெடஸ், டிராகுலாடைட்டிஸ், சிரியன், எத்தியோப்பியன் மற்றும் அரபி மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அவருக்கு..


7. இது தவிர, அவர் உலக அரசியல், புவியியல், வரலாறு, வானியல், கணிதம், மருத்துவம், அல்கெமி எனப்படும் ரசவாதம் (தகரத்தை தங்கமாக்கும் வேதியியல்), விலங்கியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.


கிளியோபாட்ரா தனக்கென தனியாக ஒரு சோதனைச் சாலையை உருவாக்கி அதில் தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.


மூலிகைகள் அழகுக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.


அவரது புத்தகங்கள் புகழ்பெற்ற அலெக்சாண்டரியா நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.


ஆனால் கி மு 319 இல் அந்த நூலகத்தில் நிகழ்ந்த ஒரு தீவிபத்தில் அந்த புத்தகங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது.


புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர் கலன் (Galen of Pergamon) கிளியோபாட்ராவின் மருத்துவக் குறிப்புகளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார்.


அவற்றில் முக்கியமானது வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பு முறைகள் குறித்தவை ஆகும்.


அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றை அனைவருக்கும் பயன் தரும் வகையில் எழுதி வைத்த பேரழகி கிளியோபாட்ரா என்ற மனிதகுலத்தின் போற்றத்தகு ஆளுமை தன் 39வது வயதிலேயே இறந்துவிட்டார்…

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.