இரசனையுடன் வாழுங்கள்!!

 


சிலர் எப்போதும் வேலை வேலை என்றுவாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலகவேலைக்காக தங்களை அப்படியே ஒப்புக்கொடுத்துவிடுவார்கள். வாரக்கணக்காக,

வருடக்கணக்காக ஓய்வு ஒழிச்சலின்றி

ஒரு இயந்திரம் போல வேலை செய்பவர்களைப்

பார்த்திருக்கிறீர்களா?

ஆனால் வேறு வழி? ஆறு நபர்கள் சாப்பிடவேண்டும்? படிக்க வேண்டும், மானத்துடன் வாழ வேண்டும் என்ற பதில் சுடும் நிஜம் தான். ஆனால் அதற்கென்று இப்படி

ஒரேடியாக சந்தோஷங்களைப்புதைத்து

தியாகியாக உங்களை உருவகப்படுத்திக் கொண்டு

சின்ன சந்தோஷங்களையும்

சின்ன தூற எறிந்துவிடாதீர்கள். அப்படி செய்தால் ஒரு

நாள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று

வீட்டில் உட்காரும்

உங்களுக்குத் தெரிய வரும்.

போதுதான்...

எத்தனை நாள்கள் வேலைப் பளுவில் உறங்கிவிட்டு மறுநாள் காலை அதே வேகத்துடன் ஓடியதால் விளைந்த பயன். சிறிதளவு பணம் கையிருப்பு நிச்சயம். ஆனால் காலம்? குடும்பத்தை ஒதுக்கிப் பழக்கப்படுத்தியதால் அதே குடும்பம் இப்போது உங்களுடன் ஒட்டாது. அவர்கள் ஒருபக்கம் நீங்கள் மறுபக்கம் என இரு பிரிவுகளாக மாறியிருப்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.

மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பேச மறுத்து, வெளியூர்களுக்குச் சென்று திரும்பி என அனேக விஷயங்கள் இல்லாமல் காலமும் கடந்துபோய் கசப்பான மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கக் கூடும். இனியாவது என்ன செய்யவேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக வேலை முக்கியம் என்னும் சிந்தனை முக்கியம். உங்களை நம்பி வந்தவர்களை, நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை அரவணைக்க வேண்டும். நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன மகிழ்ச்சியுடன் முக்கியமான விஷயம். வைத்திருக்கும்.....

அடுத்த நிமிடம் என்பது நமக்கு நிரந்தரம் இல்லை . உழைப்பு அவசியம் தான் அதற்காக ஓயாமல் உழைத்து பணம் சம்பாதித்து பிறகு கடைசி காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தால் உங்கள் உட்கார முடியாது....

உங்களுக்கு என்று சில சந்தோஷங்கள் இருக்கும் அந்த சந்தோஷங்களை அப்போது நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்....


படித்ததில் பிடித்தது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.