அனைத்து தமிழ் MPயினருக்கும் ஒரு அவசர வேண்டுகோள்!📸
நேரலை இன்றேல் இனி தேசியம் மீளாது,தேசிய உணர்வும் எழாது!
கடந்தகாலத்தில் you tube,face book live’எனும் நேரலையில் வராததே சுமந்திரன்போன்ற அரசியல் சாணக்கிய மேதைகளை இன்று தமிழினம் இழந்து தவிப்பதற்கு பிரதான காரணம்!
தமிழ்த் தேசிய உணர்வென்பது தற்போது you tube,face book நேரலைகளில் MP அருச்சுனாபோன்று கொண்டுசெல்லப்படவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டியிருப்பதால்’தயவுசெய்து இலங்கை பாராளுமன்றுக்கு தெரிவாகியிருக்கும் வடக்கு,கிழக்கு அரசியல்வாதிகள்,மற்றும் அவர்களின் தமிழ்த் தேசிய குஞ்சுகள் அனைவரும் உங்கள் உங்கள் குடும்பங்களுடனும்,காதலர்களுடனும்,நீங்கள் PA ஆக வைத்திருக்கும் அந்தப்புறத்து சட்டவாள மகராணிகளுடனும் live எனும் நேரலைக்கு தினமும் வருகைதந்து உங்கள் தேசிய பற்று தொடர்பான ஆக்ரோச அறிக்கைகளை விடுவதுடன்,மக்கள் உங்களுக்கு வழங்கிய மரியாதையையும்,தேசியப்பற்றின் வெளிப்பாடுகளையும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கான பிச்சை என MPஅருச்சுனாபோன்று பிச்சை’பிச்சை’பிச்சை’என பகிரங்கமாக அறிவித்து,நீங்கள் போலியாக பேசிவரும் தமிழ்த் தேசியத்தின் உண்மையான உணர்வுகளை கொச்சைப்படுத்துவதே மிகவும் அவசியமாகும்.
ஆகவே தயவுகூர்ந்து உங்கள் செல்போன்களை எந்நேரமும் 100%சார்ச் செய்து வைத்திருப்பதுடன், நீங்கள் நேரலைக்கு வரும்போது உங்கள் முகங்களை சிறப்பாக அலங்காரம் செய்வது மட்டுமன்றி,நீங்கள் அருகில்வைத்து அறிமுகப்படுத்தும் உங்கள் அந்தப்புறத்தார், மற்றும் யாவரையும் அதேபோன்று அலங்கரித்து நேரலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதுடன்,இடைக்கிடையே சிங்களம்,ஆங்கிலம் கட்டாயம் பேசவேண்டும் என்பது மட்டுமன்றி தினாவட்டான பார்வையும்,மிடுக்கான உடையும் அணிந்திருக்கவேண்டும் என்பதே மிகவும் அவசியமாகும்.
எனவே கடந்த தேர்தலில் மேற்கூறிய விடையங்களில் அக்கறைகொள்ளாது தமது தமிழ்த் தேசியத்தை live’ நேரலையில் கைவிட்டு காலம்சென்ற திருவாளர் மதிப்பிற்குரிய சுமந்திரன் அவர்கள் உள்ளிட்ட அத்தனை உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோமg
இங்கனம்
கருத்துகள் இல்லை