ஜனாதிபதி அவர்களே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரே!


நினைவேந்தல்கள் குறித்து உங்களை மிரட்டும், எச்சரிக்கும் விமலிடம், 1988 – 1989ல் JVP செய்த படு கொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பில் - கேளுங்கள்! 


(பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது - List of people assassinated by the Janatha Vimukthi Peramuna)


உங்கள் கட்சியின் JVPயின் முன்னாள் தோழரும், மத்திய குழு உறுப்பினரும், பிரசார செயலரும் தற்போதைய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நினைவேந்தல் குறித்து கடும் கோபமைடைந்திருக்கிறார். அதனை அனுமதித்த உங்களை கடுமையாக எச்சரித்தும் இருக்கிறார். 


குறிப்பாக வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. 


தமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் தாம் மக்களை அணிதிரட்டிப் போராட போவதாக விமல் வீரவன்ச குமுறியிருக்கிறார்.


"இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் - சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள் என சட்டத்தை மதிக்கும் விமல் (அவர் மீதும் மனைவி மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன) கூறுகிறார்.


வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் கொதிப்படைந்திருக்கிறார்.


தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த - சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை என விமல் சுட்டிக்காட்டுகிறார்.


அது மட்டும் அல்லாமல், மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது எனவும், தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு - மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்." – எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.


அந்த வகையில் உங்கள் முன்னாள் தோழர் விமலின் மிரட்டலுக்கு நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் இவற்றை முன்கூட்டியே புரிந்துகொண்டுதான் இந்த அனுமதிய வழங்கியிருப்பீர்கள் என்பது எனது திண்ணமாக இருக்கிறது.


ஏற்கனவே கற்கோவளம் இராணுவமுகாமை அகற்ற எடுத்த நடவடிக்கையை, நாமல் எதிர்த்த போது அதனை கண்டுகொள்ளாமல் உங்களது ஆட்சிக் காலத்துள் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க உள்ளதாக உங்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் உறுதி அளித்திருக்கிறார்.


அதனால் இந்த சலசலப்புகளுக்கு முன்னைய அரசாங்கங்கள், தலைவர்கள் போல அஞ்சமாட்டீர்கள் என நம்புகிறேன்.


ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) இரண்டாவது கிளர்ச்சியின் போது 1986 – 1987 களில் உங்களுடன் இணைந்தவர் விமல். ஜே.வி.பி-க்கு ஆதரவான பத்திரிகைகளான லக்திவ, ஹிரு (Lakdiva and Hiru ) ஆகியவற்றில் கட்டுரைகளை அவர் எழுதியவர். (என் பற்றியும் அவரது பத்திரிகையில் கடுமையான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது)  


விமலசிறி கம்லத் – வன்ஷநாத (Wimalasiri Gamlath and Wanshanatha) உட்பட பல்வேறு மாற்றுப்பெயர்கில் இயங்கியவர்.


ஜே.வி.பியின் உப அமைப்பான சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கத்தின் (Peoples' Movement for Freedom - Nidahasa Udesa Janatha Viyaparaya) -நிடஹாச உதேச ஜனதா வியாபராய) தலைவராகவும், பிரச்சார செயலாளராகவும் ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் (politburo member) இருந்தவர்.


தீவிரவாதத்தில் இருந்து விலகி ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த பின் 1994ல் இருந்து 2000 ஆம் ஆண்டுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்தவர். 


 2000 ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜே.வி.பியின் ஒரு வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்த விமல் 2001 நாடாளுமன்றத் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் அதிகாரப்பகிர்வு திட்டங்களை எதிர்த்த ஜே.வி.பி.யின் முன்னணி வீரராக முக்கிய பங்கு வகித்தவர். 


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நோர்வே சமாதானப் பேச்சுவாரத்தையை எதிர்த்ததிலும் விமல் முக்கிய பங்கு வகித்தவர்.


 2004 ஜனவரி 20ல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) ஜேவிபியும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை (UPFA) உருவாக்கியபோது அதில் அவரதுபங்கும் இருந்தது. அந்தக் கூட்டமைப்பின் ஊடாக 2004 நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் UPFA வின் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஜூன் 2005 இல், சாமாதான பேச்சுவார்த்தையை எதிர்த்தும், சுனாமிக் கட்டமைப்பை எதிர்த்தும் ஜேவிபி UPFA அரசாங்கத்தை விட்டு வெளியேறியபோது தேசபக்தி தேசிய இயக்கத்தின் (PNM) பொதுச் செயலாளராக விமல் செயற்பட்ட இருந்தார்.


சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தில் இருந்த போது கிடைத்த சுகபோகமும், மகிந்த ராஜபக்ஸவுடன் எற்பட்ட நெருக்கமும் உங்களுடன் (ஜே.விபியின் தலைமையுடன்) முரண்பட வைத்தது. அதனைத் தொடர்ந்து விமல் மீதான பல குற்றச்சாட்டுகள் எழுந்தன 2008ல் கட்சியில் இருந்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தீர்கள்.


அதனை அடுத்து 2008 மே மாதம், விமல் தனது தலைமையில் உங்கள் கட்சியின் (ஜேவிபியின்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தேசிய சுதந்திர முன்னணியை (NFF ஜாதிக நிதாஹஸ் பெரமுன) உருவாக்கினார்.


   டிசம்பர் 2008 இல் மகிந்த தலைமையிலான UPFA அரசாங்கத்தில் NFF இணைந்ததுடன், 2010 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டுமானம், பொறியியல் சேவைகள், வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். 


மீண்டும் கோட்டாபயவின் ஆட்சியில் அமைச்சராகி அவருடன் முரண்பட்டு வெளியேறினார். இந்முறை தேர்தலில், தோல்வி அடைவது நிட்சயம் என்பதனை முன்கூட்டியே தீர்மானித்ததால் போட்டியிடாமல் தவிர்த்துக்கொண்டார்.


அவருடன் இணைந்து கடுமையான இனவாதத்தை கட்டசிழ்த்து விட்ட சரத் விஜயசேகர உள்ளிட்ட அனைரையும் சிங்கள மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்.


எனினும் மீண்டும் தனது இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். உங்களை மிரட்டுகிறார்.


ஆயின் ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், பிரசார செயலராகவும் அக்கட்சியில் தான் (விமல்) முக்கிய பங்கு வகித்திருந்ததனை அவர் மறந்து போனாரா? 


அந்தக்கிளர்ச்சியின் போது போது ஜே.வி.பி.யின் (JVP) இராணுவக் கட்டமைப்பான தேசபிரேமி ஜனதா வியாபராய (DJV - Deshapremi Janatha Viyaparaya) ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை கொன்றதனை, காணாமல் ஆக்கியதனை ஜனாதிபதி அவர்களே விமலுக்கு ஞாபகப்படுத்துங்கள். 


விமலை தனது கூட்டாட்சியில் சேர்த்துக்கொண்ட சந்திரிக்கா அமை்மையாரின் கணவர் விஜயகுமாரதுங்க உள்ளிட்ட அரசியல் வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலர் காணமால் ஆக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் நீங்கள் (JVP - DJV) காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டதற்கு விமல் உட்பட JVP இன்னும் பதில் அளிக்கவில்லை எனவும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதனையும், அனுர அவர்களே உங்கள் முன்னாள் தோழர் விமலின் மண்டையில் குட்டுப் போட்டு சொல்லிவிடுங்கள்.


JVPயினால் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் ஆவணப்படுத்தப்பட்டதனை உங்கள் முன்னாள் தோழர் விமலுக்கு புரிய வையுங்கள். 


இங்கே தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவர்களை கொன்றது மாக்சிச லெனினிச மாவோயிசப் புரட்சியா? அல்லது பயங்கரவாதமா? என உங்கள் முன்னாள் தோழர் விமலிடம் கேளுங்கள்.


இவர்களை கொன்ற JVP கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என்றால் புலிகளில் இருந்த தமது பிள்ளைகள, உறவினர்களை, நண்பர்களை தமிழ் மக்கள் நினைவு கூர்வது பயங்கரவாதமா என, JVPயின் மத்திய குழு உறுபிபினராக இருந்த உங்கள் முன்னாள் தோழர் விமலிடம் தயவுசெய்து கேளுங்கள் ஜனாதிபதி அவர்களே.


அதனூடாக தேசத்தை கட்டி எழுப்பும் உங்கள் பயணத்தில் மாற்றத்தில் இனவாதத்திற்கு இனி இடமில்லை என்பதனையும், அதற்கு ஊறுவிளைவிப்பவர்களது முன்னைய கோப்புக்கள் கிளரப்படும் என்பதனையும் தயவு செய்து எச்சரியுங்கள் ஜனாதிபதி அனுர அவர்களே.


List of people assassinated by the Janatha Vimukthi Peramuna


K. Gunaratnam - businessman and movie director


Amara Wellappuli - Attorney-At-Law 


Anura Daniel - United National Party MP for Kandy


Chandratne Patuwathavithane - Academic & Former vice chancellor of University of Moratuwa


D. C. Atukorala - A Chief Engineer attached to the Ports Authority, Sri Lanka


Daya Pathirana- Former leader of the Independent Students Union (ISU) of University of Colombo


Daya Sepali Senadheera - United National Party MP for Karandeniya


DIG Bennet Perera- Former Director Criminal Investigation Department of Sri Lanka.


DIG Terrence Perera- Former director of the counter subversive division, Sri Lanka Police


Esmie Amarasiri - Wife of M. S. Amarasiri, former Chief Minister, Southern Provincial Council, Sri Lanka


G. V. S. de Silva - Former district minister and United National Party MP for Habaraduwa


Gamini Medagedera - attorney at law, English teacher and 

secretary of Sri Lanka communist party polonnaruwa


Gladys Jayawardene- Former Chairman of State Pharmaceutical Corporation of Sri Lanka.


Harsha Abeywardena - Former chairman of the United National Party


Jinadasa Weerasinghe - United National Party MP for Tangalle

K. Amaratunge - Chief News Editor, Sri Lanka Rupavahini Corporation


L. W. Panditha - Member of Sri Lankan communist Party and Trade unionist


Lesley Ranagala - United National Party MP for Borella


Leslie Yatanwala - Attorney-At- Law 


Lionel Jayatilake - Former minister and United National Party MP


Merrill Kariyawasam - United National Party MP for Agalawatte


Nandalal Fernando Former General Secretary of United National Party


Premakeerthi de Alwis- Famous Sri Lankan radio and television broadcaster and lyricist.


Rev. Fr. Michael Paul Rodrigo, OMI- Catholic priest


Sagarika Gomes - Artist and TV newscaster.


Stanley Wijesundera - Sri Lankan academic and a Professor of Chemistry, the first Vice Chancellor of the University of Colombo and formerly the Chairman of the Association of Commonwealth Universities


Thevis Guruge - Distinguished broadcaster with Radio Ceylon and subsequently the Sri Lanka Broadcasting Corporation. First Sinhala Announcer of the Radio Ceylon


Ven. Kotikawatte Saddhatissa Thera - Famous Buddhist monk


Ven. Pohaddaramulle Premaloka Thero - Buddhist monk


Vijaya Kumaranatunga - Popular Sri Lankan film actor and politician, founder of Sri Lanka Mahajana Party (SLMP)


W. M. G. T. Banda - Former Minister of Buddhist Affairs and United National Party MP for Galagedara

#ஞாபகங்கள்


“ஆறின கஞ்சி பழங் கஞ்சி” – “பத்தோடு நீங்களும் பதினொன்றாகக் கூடாது” என்பதனால் உங்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். அடுத்த மடலில் மீண்டும் சந்திப்போம். #ஞாபகங்கள்


https://www.facebook.com/nadarajah.kuruparan.33/posts/pfbid0hbVZfD7RfgbQHM5HzEVNKk4iFLdP7vBMqb4ZXcgjnqq3mFX7YFQvtKySP9JsXpsDl மடல் 3


https://www.facebook.com/nadarajah.kuruparan.33/posts/pfbid0GK8NSHNCvtkPjzoHUwUjHz7ZgvqP2MrQU3fX59iEehoXxZzy7FQ2nb5tWTg7y1gvl - மடல் 2


https://www.facebook.com/nadarajah.kuruparan.33/posts/pfbid0CADBQS4UnTKbWdZr2bjDoF2PpBsojxnvDBXEGjSdT3dxazTPjHpuTa3Sj9xzrYRdl - மடல் 1

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.