அச்சமில்லை!!
எவரது அதிகாரத்திற்கும் எந்த அடக்குமுறைக்கும் பணிந்து போய் நாம் அடிமைகளாக இருக்க மாட்டோம்..
மரணத்தைக் கண்டும் நாம் பயப்படப் போவது இல்லை...
அவ்வாறு மரணித்தால் கூட நரகத்திற்கு சென்று வேதனைப் படவும் மாட்டோம்…
எந்த நோயும் எம்மை அணுகப் போவது இல்லை....
அத்துடன் எம்வாழ்வு இன்பமயமானதாக இருக்குமே தவிர துன்பங்கள் எமக்கு இல்லை…
இவ்வாறு தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கூறுவது எந்த motivation Speaker அல்லது எந்த புரட்சியாளன் என்று நீங்கள் சிந்திக்கலாம்...
உண்மையில் இந்தக் கருத்துக்களைக் கொண்ட ஒரு பாடலை 1000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர் ஒரு அரசனுக்கு முன்னால் நின்று பாடி இருக்கிறார்...
இந்தப் பாடல் நாம் எல்லோரும் சிறு வயதில் படித்த பினவரும் பாடல் தான்...
‘நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை’
பகிர்வு
கருத்துகள் இல்லை