எமது விடுதலைப் போராட்டம் பற்றிய "சல்லியர்கள்" திரைப்படம் விரைவில்!
தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் எம் மக்கள் மீதான சிறீலங்காப் பேரினவாத அரச படைகளின் இனவழிப்பிலும் மருத்துவப் போராளிகளின் சேவையும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியது.
அத்தகைய மருத்துவப் போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் உலகறியச் செய்யும் வகையில்…
*“சல்லியர்கள்”*
என்னும் மிகவும் அற்புதமான முழுநீளத் திரைப்படத்தை இயக்குநர் திரு.கிட்டு அவர்களின் இயக்கத்தில், தயாரித்துள்ளார் நடிகரும் தமிழ்தேசிய உணர்வாளருமான திரு.சே.கருணாஸ் அவர்கள்.
எமது விடுதலைப் போராட்டம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், எமது மக்களுடனான கலந்துரையாடல்கள், எமது போராளிகளின் ஆலோசனைகளை நாடாமல்
வெறும் வர்த்தக நோக்கில் தமிழ்நாட்டில் இருந்து பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், எமது போராட்டத்தின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் ஆழமாகக் கற்றறிந்தும் அதற்கு மேல் திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எமது போராளிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்து மிகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் தயாரிக்கப்பட்டது தான் இந்த “சல்லியர்கள்” திரைப்படம்.
இத்திரைப்படத்தை உலகெங்கும் வாழும் தமிழர்களிடத்திலும் சர்வதேச திரைப்படப் பார்வையாளர்கள் மனிதநேயச் செயற்பாட்டாளர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ர்களின் தலையாயக் கடமையாகும்.
2025, சனவரி 01 ஆம் திகதி உலகெங்கும் “சல்லியர்கள்” திரைப்படம் வெளியிடவிருக்கும் இருக்கும் நிலையில், எமது மக்களின் கருத்துகளை அறியும் வகையிலும், அதனை உலகுக்கு தெரிவிக்கும் வகையிலும், குறித்த சில நாடுகளில் மட்டும் இத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
அதன் முதல் கட்டமாக சுவிஸ் நாட்டில்…
*எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17.11.2024 அன்று மாலை 5:45 மணிக்கு சூரிச் Arena Cinemas திரையரங்கில் இத் திரைப்படம் திரையிடப்படுகிறது.*
தற்பொழுது சுவிஸ் நாட்டுக்கு வந்துள்ள நடிகர் கருணாஸ் அவர்கள் இ்ச் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
160 பார்வையாளர்களுக்கான இருக்கைகள் மட்டுமே உள்ளதால், சிறப்புத் திரையிடலில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி

.jpeg
)





கருத்துகள் இல்லை