தமிழ்த் தேசத்து அரச அதிகாரிகள் / அரச உத்தியோகத்தர்களிடம் அன்பான வேண்டுகோள்.


வடக்கு கிழக்கில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை வன்னி யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களிலுமுள்ள வாக்காளப் பெருமக்கள் அனைவரும் இம்முறை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள ஏகோபித்த ஆதரவை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். 


இம்முறை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணிக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். 


யாழ்ப்பாணம் (யாழ்- கிளிநொச்சி) தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு எமது மக்கள் வழங்க வேண்டுமென அன்பாக வேண்டுகிறேன். 


அத்துடன் எனக்கும் ஒருசந்தற்பம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலக்கம் 02

செ.கஜேந்திரன் இலக்கம் 9

மூன்றாவது விருப்பு வாக்கினை எமது அணியில் நீங்கள் விரும்பும் ஒருவருக்கு வழங்கலாம். 


தமிழ்த் தேசத்தின் இருப்பை நிரந்தரமாக இல்லாதொழிக்கும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தரப்பு ஆதரவு வழங்குவதனைத் தடுப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எமது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக் கொள்ளவது அவசியமானது.  

அந்த இலக்கை அடைய 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழில் ஆறு ஆசனங்களையும் எமது அணி கைப்பற்ற வேண்டும். 


தங்களது குடும்பத்தவர்கள் ஏனைய உறவினர்கள் நண்பர்களிடமும் எமக்காக வாக்களிக்குமாறு கோருமாறு அன்பாக வேண்டுகின்றேன். 


நன்றி


செ.கஜேந்திரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 

பொதுச் செயலாளர் 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.