அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்!


 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகவுள்ளார். ஹிலாரி கிளின்டனை அதிர்ச்சியடைச் செய்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோ பைடன் அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஜனாதிபதியாகவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.


இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 279 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்) வாக்குகளைப் பெற்றுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது. முன்னதாக, அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானபோது, அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.


கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 219 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார்.


டிரம்பை ஜனாதிபதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார்.


“இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும், இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார்.


“அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார் டிரம்ப்.


மேடையில் தன்னுடன் இருந்த மனைவி மெலனியா மற்றும் தனது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், “அவர் (மெலனியா) ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். மக்களுக்கு உதவ மிகவும் கடினமாக உழைக்கிறார்" என்று கூறினார்.


தனது பிரசாரக் குழுவில் முக்கிய பங்கு வகித்த ஈலோன் மஸ்க் குறித்து பேசிய டிரம்ப், அவரை குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விவரித்தார்.


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.