வெற்றிக்கனி பறிக்க வாரீர்!!
"சுதந்திரத்தின் கனிகளைத் தரும் மரத்தை என் இரத்தம் வளர்க்கும் நான் அவர்களை நேசிக்கிறேன் என்று என் மக்களிடம் கூறுங்கள் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்"
இது தென்னாபிரிக்க விடுதலையாளன் மகுலங்கு ( Mahlangu) வெள்ளையர்களால் தூக்கில் போட முதல் கூறிய வார்த்தைகள்.
ஜெயம் அண்ணா களமுணையில் நிற்கிறார்
நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியேறுமாறு முள்ளிவாய்க்கால் இறுதி நேரம் பணிக்கப்பட்டது கோல்சரை கட்டிற்றன் துவக்கையும் எடுத்திட்ட் பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே…எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , துவாரகன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளுங்கள்
“எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ.
அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன் எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு சொல்லுங்கோ…”
இது இளங்கோவின் கடைசி வார்த்தைகள்
நான் மரணத்தை மகிழ்ச்சியுடனும் ஆத்ம திருப்தியுடனும் தழுவிக்கொள்கிறேன் எங்கள் தலைவனின் தலைமையில் அணைத்து மக்களும் கிளர்ந்து எழுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் இந்த மாபெரும் மக்கள் புரட்சி என்றோ ஓர் நாள் எம் இலட்சியத்தை நிறைவேற்றியே தீரும் எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின் பேரில் அவர்கள் மீது கொண்ட தளராத பாசத்தின் பெயரில் அவர்களின் விடிவிற்காக 65வது விடுதலையாளனாக என் தோழர்களை நோக்கி மெதுவாக போய்க்கொண்டு இருக்கிறேன் இது திலீபன் அண்ணாவின் கடைசி வரிகள்
தூக்கிலிடப்படும்போது மகிலங்கு தீவிரவாதி தேசத்துரோகி பின் தென்னாபிரிக்கா விடுதலையான பிறகு மகிலங்கு மிகப்பெரிய விடுதலையாளன்.
தோற்றால் தீவிரவாதி என்றும் வென்றால் விடுதலையாளன் என்பதே உலக வரையறை
இந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்றால் நாங்கள் வென்றாக வேண்டும் வென்றாக வேண்டும் என்றால் இறுதி வரை போராடித்தான் ஆகவேண்டும்
JVP இன் தலைவர் ரோகண விஜய வீரவை ஸ்ரீலங்கா இராணுவம் கொலை செய்யும்போது அவர்கள் ஒடுங்கிவிடவில்லை வழிமுறைகளை மாற்றினார்கள் இலட்சியத்தில் சரியாக இருந்தார்கள் இன்று வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள்.
இன்று மிகப்பெரிய விடுதலையாளர்கள் என்று கொண்டாடும் JVP ஒரு காலத்தில் தீவிரவாதிகள் தேசத்துரோகிகள் ஆகையால் இங்கு தீவிரவாதியா போராளியா என்பதை வெற்றிதான் தீர்மானிக்கிறது
முதலில் வெற்றிக்கான வழிமுறைகளை தேடுவோம் நாமும் வெல்வோம் உலகின் தலைசிறந்த விடுதலைப்போராட்டம் என்று இந்த உலகம் எம்மை அழைக்கும் அதற்கு ஒரே ஒரு தடைதான் உள்ளது அதுதான் வெற்றி அதை நாம் சுவைக்கும்போது உலகம் தானாகவே கூறும் உலகின் தலைசிறந்த விடுதலையாளன் மேதகுதான் என்று.
ஆகையால் வெல்வோம் அதற்காக போராடுவோம் விடுதலையே எங்கள் மூச்சு.
செந் தமிழன்
கருத்துகள் இல்லை